ரஷ்யாவால் விஷம் கொடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்: கோமாவிலிருந்து கண் விழித்தபின் வெளியான முதல் புகைப்படம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் ஒருவர் திடீரென சுயநினைவிழந்து கோமா நிலைக்கு சென்றார்.

ரஷ்ய அதிபர் புடினின் கடும் விமர்சகரான Alexei Navalny என்ற அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில் கிரெம்ளின் மாளிகை இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அவரை தங்கள் நாட்டுக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்த ஜேர்மனி, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது உண்மைதான் என அறிவித்தது.

பிரித்தானியாவில் உளவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட நோவிச்சோக் என்ற நச்சுப்பொருளே Navalnyக்கும் கொடுக்கப்பட்ட உண்மை வெளியானது.

இந்நிலையில், கோமாவிலிருந்து எழுந்தபின் முதல் முறையாக புகைப்படம் ஒன்றிற்கு தனது குடும்பத்துடன் போஸ் கொடுத்துள்ளார் Navalny.

பெர்லின் மருத்துவமனையின் படுக்கை ஒன்றில் அமர்ந்திருக்கும் Navalny, 26 நாட்களுக்குப் பின் முதன்முறையாக. ஹலோ, நான்தான் Navalny, இப்போதும் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை, ஆனால், நேற்று முதன்முறையாக என்னால் சுயமாக நாள் முழுவதும் மூச்சு விட முடிந்தது என்று கூறியுள்ளார்.

தங்களுக்கும் Navalnyக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவரும் ரஷ்யா, Navalny உடல் நலம் தேறியதில் தங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளது.

அதே நேரத்தில், தங்கள் நாடுதான் Navalnyக்கு விஷம் கொடுத்தது என்னும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்குமாறு ஜேர்மனியைக் கோரிவருகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்