டிக்கெட் வாங்கும்படி கூறிய பெண் நடத்துனரை சூழ்ந்து கொண்டு மோசமாக நடந்துகொண்ட 80 பேர்: 200 பொலிசார் குவிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில், ரயில் ஒன்றில், பெண் நடத்துனர் ஒருவரை சூழ்ந்துகொண்டு மோசமாக நடந்துகொண்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Hamburg செல்லும் ரயில் ஒன்றில் குர்திஷ் இளைஞர் இயக்கம் என்னும் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் பயணித்துள்ளார்கள்.

அப்போது அவர்கள் டிக்கெட் எடுத்துள்ளார்களா என்று கேட்ட பெண் நடத்துநர் ஒருவரை சூழ்ந்துகொண்டு, அவர்கள் அவரை மோசமாக நடத்தியதாக தெரிகிறது.

உடனே ரயில் நிறுத்தப்பட்டு, பொலிசார் அழைக்கப்பட, 200 பொலிசார் ரயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மன் ஊடகம் ஒன்று, டிக்கெட் இல்லாமல் பயணித்த அந்த அமைப்பினர், அந்த பெண் நடத்துனரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கிறது.

பொலிசார் வந்தும் கொஞ்சமும் பயப்படாத அந்த கூட்டம் பொலிசாரையும் தாக்கியுள்ளது. அதில் பொலிசார் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அவர்களை சோதனையிட்டபோது, அவர்களில் பலர் ஜேர்மனியில் வாழ அனுமதி பெற்றவர்கள் இல்லை, அதாவது ஜேர்மனியில் வாழ்வதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்