முக்கிய ஐரோப்பிய நகரங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்த ஜேர்மனி

Report Print Arbin Arbin in ஜேர்மனி

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜேர்மனி முக்கிய ஐரோப்பிய நாடுகளான சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகளை புதன்கிழமை மாலை ஜேர்மனி வெளியிட்டுள்ளது. அதில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் வாட் மண்டலங்களை ஆபத்து பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்த இரண்டு மண்டலங்களில் இருந்து ஜேர்மனிக்கு வரும் பயணிகள், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமின்றி, கொரோனா சோதனைக்கும் தங்களை உட்படுத்த வேண்டும்.

இதனிடையே, பிரான்சில் உள்ள சில முக்கிய பகுதிகளையும் ஆபத்து பட்டியலில் ஜேர்மணி இணைத்துள்ளது.

பாரிஸ் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பகுதிகள் ஏற்கனவே ஜேர்மனியின் ஆபத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மட்டுமின்றி, ப்ராக் நகரம், குரோஷியா என பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்