கொரோனா காலகட்டத்திலும் இது மட்டும் குறையவில்லை ஜேர்மனியில்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கொரோனா காலகட்டத்திலும் ஜேர்மனியில் தட்டுப்பாடே இன்றி தாராளமாக கிடைக்கிறதாம் போதைப்பொருட்கள்.

இன்னமும் சந்தையில் போதைப்பொருகள் புழக்கம் தாரளமாக உள்ளது, போதை மருத்து கடத்தல்காரர்கள் புதிய வழிகளைக் கற்றுக்கொண்டு தங்கள் பொருட்களை தங்கு தடையின்றி விற்கிறார்கள் என்கிறார் ஜேர்மன் புலனாய்வுத்துறையின் தலைவர்.

கொரோனா காலகட்டத்தில் பல தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன.ஆனாலும், போதைப்பொருள் விற்பனையாளர்களோ ’Work from home’ முறையில் அருமையாக வியாபாரம் செய்கிறார்கள்.

போதைப்பொருள் விற்பனையாளர்கள், ஒன்லைனில் தங்கள் சேவையை தொடர, குறுகிய காலகட்டத்தில் கற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஜேர்மன் புலனாய்வுத்துறையின் தலைவர் Holger Münch.

2019இல் பதிவு செய்யப்பட்ட போதைக் குற்றங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 2.6 சதவிகிதம் அதிகரித்து 359,747ஆக உயர்ந்துள்ளது.

வேறு வழியே இல்லை, பேசாமல் வயது வந்தவர்களுக்கெல்லாம் நாமே கொஞ்சம் கொஞ்சம் கஞ்சாவை விநியோகித்துவிட்டால், பொலிசார் இந்த போதைக் குற்றங்களை விட்டு விட்டு தீவிரமான குற்றங்களில் கவனம் செலுத்தலாம் என்கிறார் போதைப்பொருள் கொள்கை வல்லுநரான Wieland Schinnenburg.

ஆனால், அப்படி விநியோகித்தாலும் போதைப்பொருள் உட்கொள்வதோ அல்லது அது தொடர்பான குற்றங்களோ குறையுமா என்றால், அதற்கு ஆதராங்கள் இல்லை என்கிறார் Münch.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்