பெற்ற தாயால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகள்: அஞ்சலி செலுத்த கூடிய நூற்றுக்கணக்கானோர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெற்ற தாயால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு நினைவாஞ்சலி செலுத்துவதற்காக சுமார் 800 பேர் ஜேர்மனியில் கூடினார்கள்.

Solingen நகரில் Christiane K (27) என்ற பெண் தனது ஐந்து முழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், அவர் தண்டவாளங்களுக்கிடையே விழுந்ததால் பலத்த காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார்.

இதற்கிடையில், அவரது மூத்த மகனான Marcel (11)ஐ அவர் தனது தாய் வீட்டுக்கு அனுப்ப, அவன் சென்று நடந்ததை தாயிடம் கூற, அவர் உடனே பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

AP

மூன்று திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில், மன அழுத்தத்துடன் வாழ்ந்துவந்த Christiane இப்படி ஒரு பயங்கர முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில்தான் Christianeஇன் பிள்ளைகளான, பையன்கள் Luca மற்றும் Timo, மற்றும் பெண் குழந்தைகள் Sophie, Leonie மற்றும் Melina ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு முன் 800க்கும் அதிகமான ஜேர்மானியர்கள் கூடினர்.

பிள்ளைகளுக்கு பிடித்த பொம்மைகள், பூக்கள் மற்றும் பலூன்களில் பிள்ளைகளின் பெயர்களை எழுதியும் மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அவர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.

AP

இப்போதும் Christiane விசாரணைக்குட்படுத்தப்படும் நிலைக்கு வராததால் பொலிசார் இன்னமும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை.

அவரிடம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே, என்ன நடந்தது, பெற்ற பிள்ளைகளை கொலை செய்யத் துணிந்ததற்கு என்ன காரணம் என்பதுபோன்ற உண்மைகள் வெளிவரும்!

AP
AP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்