நவால்னி குடித்த தேநீரில் விஷம்: ரஷ்யாவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ள ஜேர்மனி

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ரஷ்யாவின் முக்கிய எதிர்கட்சி தலைரான நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடியை அளித்துள்ளது ஜேர்மனி.

அலெக்ஸி நவால்னி கடந்த மாதம் 13-ஆம் தேதி சொ்பியா பிராந்தியத்தின் டோம்ஸ்க் நகரிலிருந்து விமானம் மூலம் மாஸ்கோ வந்துகொண்டிருந்தாா்.

விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென நவால்னி சுயநினைவை இழக்க ஓம்ஸ்க் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தற்போது நவால்னி பெர்னிலில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

விமானம் ஏறுவதற்கு முன்பாக நவால்னி தேநீர் அருந்தியதாகவும், அதில் ரஷ்யா வேண்டுமென்றே விஷத்தை கலந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.

ஏனெனில் நவால்னியின் உடலில் ரஷ்யாவின் நோவிசோக் எனப்படும் நச்சுப்பொருள் கலந்திருப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளதுடன் அதுதொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஹீக்கோ மாஸ் கூறுகையில், நவால்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக நாங்கள் நடத்தி வரும் விசாரணையில், ரஷியா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அவ்வாறு ரஷியா ஒத்துழைக்கத் தவறினால், அந்த நாட்டுடன் மேற்கொண்டுள்ள ‘நாா்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும்.

அந்த திட்டம் தொடா்பான எங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு ரஷ்யா எங்களைக் கொண்டு செல்லாது என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்