உண்மையை தௌிவுபடுத்தாவிட்டால் இது தான் கதி: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி

Report Print Basu in ஜேர்மனி

நவால்னிக்கு விஷம் கொடுத்து தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி புதினை கடுமையாக விமர்சித்து வருபவருமான அலெக்ஸி நவால்னி, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.

தேநீரில் விஷம் கலந்ததால் அதை குடித்த அவர் கோமா நிலைக்கு சென்றதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடுமையாக நோய்வாய்ப்பட்ட அலெக்ஸி நவல்னி சைபீரியாவிலிருந்து ஜேர்மனிக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார்.

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவல்னிக்கு நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தை கொடுத்துள்ளனர் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக ரஷ்யா விரைவில் விளக்கம் அளிக்காவிட்டால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவரான ஜேர்மனி விவாதிக்கும் என்று அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் தெரிவித்தார்.

என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த ரஷ்யா உதவவில்லை என்றால், எங்கள் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்த தகுந்த நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதிக்க நாங்கள் நிர்பந்திக்கப்படுவோம் என்று ஹெய்கோ மாஸ் கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்