கோமாவிலிருக்கும் புடின் விமர்சகரின் உள்ளாடைகளில் நச்சுப்பொருள் தெளிக்கப்பட்டிருக்கலாம்: பிரபல அறிவியலாளர் அதிரடி தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ரஷ்ய அதிபரை கடுமையாக விமர்சிக்கும் ஒருவர் ஜேர்மன் மருத்துவமனையில் கோமாவிலிருக்கும் நிலையில், அவரது உள்ளாடைகளில் நச்சுப்பொருள் தெளிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த Alexei Navalny தீடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.

இந்த Alexei Navalny, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், புடினை கடுமையாக விமர்சித்து வருபவரும் ஆவார்.

இந்நிலையில், அவரது உள்ளாடைகளில் நச்சுப்பொருள் தெளிக்கப்பட்டிருக்கலாம் என ஒரு பிரபல அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் முன்னாள் உளவாளி Sergei மற்றும் அவரது மகள் Yulia Skripal மீது பிரயோகிக்கப்பட்ட நச்சுப்பொருளான நோவிச்சோக்கை கண்டுபிடித்த அறிவியலாளரான Vladimir Uglevதான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Navalny தங்கியிருந்த அறைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த ரகசிய ஏஜண்டுகள், அவரது உள்ளாடைகளில் இந்த நச்சுப்பொருளை தெளித்திருக்கலாம் என்று கூறுகிறார் அவர்.

அந்த உடைகளை அணிந்துகொண்டு விமானத்தில் ஏறிய சிறிது நேரத்தில் தோல் வழியாக உடலுக்குள் செல்லக்கூடிய அந்த நச்சுப்பொருள் அவரை கோமா நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என தான் கருதுவதாக Uglev தெரிவித்துள்ளார்.

அந்த நச்சுப்பொருள் நோவிச்சோக்கா என கேட்கப்பட்டபோது, அது நோவிச்சோக்காக இருக்க வாய்ப்பில்லை என்றும், நோவிச்சோக் பயன்படுத்தப்பட்டிருந்தால், அது அதை தொட்ட அனைவரையும் பாதித்திருக்கும், Navalnyயை மட்டுமல்ல என்கிறார் Uglev.

அத்துடன் அந்த நச்சுப்பொருள், ஒரு துளி தண்ணீரில் 30இல் ஒரு பங்கே இருக்கும் அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தால் கூட, தன் வேலையைக் காட்டிவிடும் என்றும் கூறியுள்ளார் அவர்.

மேலும் Navalny உடல் நலம் பாதிக்கப்பட்டதும், ரஷ்யாவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் வைத்தே அவரது உடைகளை கழற்றி எரித்திருப்பார்கள், அவரையும் குளிக்க வைத்து கிருமிநீக்கமும் செய்திருப்பார்கள் என்பதால், Navalnyக்கு விஷம் வைக்கப்பட்டதை கண்டுபிடிக்காமலே போகக்கூட வாய்ப்புள்ளது என்கிறார் Uglev.

இதற்கிடையில் Navalny பெர்லின் மருத்துவமனையில் இரண்டு வாரங்களாக இன்னமும் கோமா நிலையிலேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்