ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபர்... ஏற்றுக்கொள்ள தாமதித்த நாடு: காரணம் இதுதான்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

போலந்து நாடு, ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபரை ஏற்றுக்கொள்ள காலம் தாழ்த்தியதன் பின்னணியில் ஒர் முக்கிய விடயம் உள்ளது.

போலந்து நாட்டுக்கான ஜேர்மன் தூதராக Arndt Freytag von Loringhoven என்பவர் நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவரை தூதராக ஏற்றுக்கொள்ள போலந்து தாமதித்தது, கொஞ்ச நாட்களல்ல கிட்டத்தட்ட மூண்று மாதங்கள் தாமதித்தது.

Loringhovenஇன் தந்தை இரண்டாம் உலகப்போரின்போது ஒரு நாஸி அதிகாரியாக இருந்துள்ளார்.

அதனால்தான் போலந்து Loringhovenஐ தூதராக ஏற்றுக்கொள்ள தயங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

81 ஆண்டுகளுக்கு முன் ஜேர்மன் நாஸிக்கள் போலந்தை ஆகிரமித்தார்கள். அதனால் ஏற்பட்ட போரில் 6 மில்லியன் போலந்து குடிமக்கள் உயிரிழந்தார்கள்.

அந்த காயம் இன்னமும் ஆறாத நிலையில், வரலாற்றை மாற்றிக்கூற முயல்வதும் தங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்கவும் வருத்தம் தெரிவிக்கவும் தவறுவதும் தங்களுக்கு ஏற்பட்ட காயம் ஆறுவதை கடினமாக்குவதாக தெரிவித்தார் Szymon Szynkowski vel Sek என்னும் துணை வெளியுறவு அமைச்சர்.

இந்த குறிப்பிட்ட விடயத்தைப் பொருத்தவரி ஜேர்மனியும் ஜேர்மன் அரசியல்வாதிகளும் எத்தகைய மன நிலைமையைக் கொண்டுள்ளார்கள் என்பது முக்கியம் என்றார் அவர்.

தற்போது Loringhovenம் போர் குறித்து தங்களைப்போன்ற எண்ணம் கொண்டவர் என்பதால் அவரை தூதராக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் Szymon.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்