மரங்கள் அடர்ந்த பகுதியில் தனியாக நின்ற கார்: காருக்குள் இருந்த அழகான இரட்டைக்குழந்தைகள் மற்றும் தாயின் நிலை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சுவிஸ் கிராமம் ஒன்றின் அருகில் மரங்கள் அடர்ந்த பகுதியில் கார் ஒன்று தனியாக நிற்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், அதற்குள் இருந்த ஒரு பெண் மற்றும் குழந்தைகளின் நிலையைக் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

மருத்துவ உதவிக்குழுவினர் Utikon என்ற அந்த கிராமத்திற்கு விரைந்தபோது, அந்த காருக்குள் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அழகான இரட்டைக் குழந்தைகளும் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.

அந்த பெண் குழந்தைகளுக்கு நான்கு வயதிருக்கும். அந்த பெண் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் அல்ல, அவர் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.

அவர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த பெண் அந்த குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

அந்த அழகான தேவதைகளைப் போன்ற இரட்டைக்குழந்தைகளைக் கொல்லத்துணியும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்