ஒரு அழகான வீடு... அமைதியான குடும்பம்: உள்ளே நுழைந்தபோது கண்ட காட்சியால் விடுப்பு எடுத்துக்கொண்டு ஓடிய பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் Cologneஇல் அமைந்திருந்தது அந்த அழகான வீடு... அக்கம் பக்கத்தவர்கள் அது ஒரு அமைதியான குடும்பம் என்றார்கள்.

ஆனால், அந்த வீட்டை சோதனையிட்ட பொலிசார் கண்ட காட்சியை சகிக்க முடியாமல், பொலிஸ் அதிகாரிகளில் மூன்று பேர் விடுப்பு எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்கள்!

அப்படி என்ன இருந்தது அந்த வீட்டில்?

ஒரு மூன்று மாதக் குழந்தை முதல் மொத்தம் 50 பிள்ளைகள் இருந்தார்கள் அந்த வீட்டிற்குள்...

தான் பெற்ற மூன்று மாத குழந்தை முதல் அத்தனைபேரையும் துஷ்பிரயோகம் செய்து அதை வீடியோவும் புகைப்படங்களும் எடுத்திருந்தான் Jörg L (43)என்னும் சமையல் கலைஞனாக பணிபுரியும் நபர்.

அவனுடன் 87 பேர் கூட்டாளிகளாக இருந்தார்கள். குழந்தைகளின் துஷ்பிரயோக படங்கள் குரூப் சாட்களில் பகிரப்பட்டன.

ஒவ்வொரு சாட் குரூப்பிலும் 1,800 பேர் வரை உறுப்பினர்களாக இருந்தார்கள்.

ஜேர்மன் வரலாற்றின் இந்த மிகப்பெரும் குழந்தைகள் துஷ்பிரயோக வழக்கில் விசாரணை அதிகாரிகளாக இருந்த மூன்றுபேர், அந்த படங்கள், வீடியோக்களின் வக்கிரத்தைக் கண்டு மனம் பாதிக்கப்பட்டு நோய் விடுப்பு (sick leave) எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

பிடிபட்ட 87 குற்றவாளிகளின் பின்னணியில் பலர் இருந்தார்கள், மொத்தத்தில் 30,000 பேர். வழக்கில் முக்கிய குற்றவாளியான Jörg L, தனது கூட்டாளியான Kamp-Lintfort என்பவனுடன் சேர்ந்து மூன்று மாதமே ஆன தனது குழந்தை மற்றும் வளர்ப்பு மகனை துஷ்பிரயோகம் செய்துள்ளான்.

அவன்மீது 79 குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, அவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவனது கூட்டாளியான Kamp-Lintfortக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வதும், அதை வீடியோ மற்றும் படங்களாக்கி பகிரும்போதும், அது ஒருகுற்றச்செயல் அல்ல,

அது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாதாரணமான விடயம் என்பதுபோல் ஒவ்வொரு சாட் குரூப்பிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டதும், அதை ஒரு கூட்டம் அழுக்கு மனம் பிடித்தவர்கள் ஒப்புக்கொண்டதும்தான்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்