மீண்டும் சாதித்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

உலகில் பேச்சுத் திறமையால் சாதித்த தலைவர்கள் பட்டியலில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் மேடைப் பேச்சு நடை அனைவரிடமும் எதிரொலிக்கவில்லை என்றாலும், தனது தலைமைத்துவ திறமைக்காக மீண்டும் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்.

பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம், 12 மாதங்கள் செலவிட்டு, உலகத் தலைவர்களின் செயற்பாடுகளை பகுப்பாய்வு செய்யும் பொருட்டு அவர்கள் மேற்கொண்ட பத்திரிகையாளர் சந்திப்புகள், உரைகள் மற்றும் மேடைப்பேச்சுகள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

இதில் பேச்சுத்திறமை மிகுந்த உலகின் முதல் 10 தலைவர்களில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் முதலிடத்திலும் வந்துள்ளனர்.

குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது இடத்திலும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஏஞ்சலா மெர்க்கல் பொதுவாக தமது பேச்சுக்களில் எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில்லை.

ஆனால் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அவர் மக்களுக்கு நம்பிக்கை அளித்ததுடன் இழப்புகளை கண்டு உணர்ச்சிவசப்படாமல் செயல்பட்டார் எனவும் ஆய்வு மேற்கொண்ட நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்