ஜேர்மன் தலைநகர் பெர்லினில் திடீரென குறைந்துள்ள மக்கள்தொகை: கொரோனா காரணமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
3195Shares

உலகின் பல பெரிய நகரங்களிலுள்ள மக்கள், கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் நகரங்களை காலி செய்துவிட்டு கிராமங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.

400,000 நியூயார்க்வாசிகள் நகரத்தை காலிசெய்துவிட்டு கிராமங்களுக்கு சென்றனர். லண்டன் மற்றும் பாரீஸ்வாசிகளும் அப்படித்தான்.

ஆனால், அதே நிலைமை ஜேர்மன் தலைநகரில் காணப்பட்டதா என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார் ஆராய்ச்சியாளரான Ariane Sept என்பவர்.

அப்படி நடக்கவில்லை என தனது ஆராய்ச்சியிலிருந்து தெரியவந்ததாக தெரிவிக்கும் Ariane, அதற்கான காரணங்களையும் முன்வைக்கிறார்.

முதல் காரணம், பெர்லின் வாசிகளுக்கு நீண்ட நாள் வாழும் வகையிலான வீடுகள் பெர்லினுக்கு வெளியில் உள்ள கிராமங்களில் இல்லை.

மாறாக, சில குடும்பங்கள் இரண்டாம் நிலை நரங்களுக்கு குடிபெயர்ந்தன. ஆனால், அதற்கு காரணம் கொரோனா அல்ல, விலைவாசி குறைவாக இருப்பதாலேயே அவர்கள் அங்கு குடிபெயர்ந்துள்ளார்கள், அதுவும் இன்று நேற்றல்ல 10 ஆண்டுகளாகவே இது நடந்துவருகிறது.

ஆகவே, பெர்லின் நகர மக்கள் கொரோனாவைக் கண்டு அஞ்சி கிராமக்களுக்கு குடிபெயர்ந்தார்களா என்றால், இல்லை என்பதே பதில்.

இன்னொரு முக்கிய விடயம், பெர்லின் மக்கள் தொகையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் சர்வதேச மாணவர்கள்.

அவர்கள் பெர்லினிலுள்ள பலகலைக்கழகங்களுக்காக மட்டுமல்ல, பெர்லினில் புகழ்பெற்ற இரவு வாழ்க்கைக்காகவும் அங்கு வருகைபுரிகிறார்கள்.

கொரோனாவால் இரவு விடுதிகளும் மூடப்பட்டுவிட்டதால், மாணவர்கள் வேறு இடம் தேடி போய்விட்டதும் பெர்லினில் மக்கள்தொகை குறைந்ததுபோல் காட்சியளிப்பதற்கு காரணம் என்கிறார் Ariane.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்