ஜேர்மனியில் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு இருக்கும் ஆபத்து..! உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதம்

Report Print Basu in ஜேர்மனி
703Shares

ஜேர்மனியல் கோடைகால விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், மாணவர்கள் வகுப்பறையில் பாடங்கள் எடுக்கும் போது உட்பட பள்ளிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என ஜேர்மனியின் உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வலியுறுத்தியுள்ளனர்.

அறிகுறியில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களால் இருக்கும் ஆபத்து காரணமாக, பாடங்கள் எடுக்கும் போது உட்பட அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணியுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதத்தில் எழுதினர்.

வகுப்பறைகளில் காற்று சுழற்சிக்கான நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா தான் முதலில் மீண்டும் பள்ளிகளை திறந்தது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு இரண்டு பள்ளிகள் மூடப்பட்டன.

தொற்றுநோயால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நினைப்பது தவறு என எச்சரிக்கிறோம். இத்தகைய கருத்துக்கள் விஞ்ஞான தரவுகளுடன் பொருந்தாது என்று வைராலஜிஸ்டுகள் தங்கள் கடிதத்தில் எழுதினர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்