பெய்ரூட் வெடி விபத்தில் சிக்கிய ஜேர்மன் தூதருக்கு நேர்ந்த கதி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்தில் ஜேர்மன் தூதரக பெண் அலுவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas வெளியிட்டுள்ளார்.

நாம் பயந்ததுபோலவே ஆகிவிட்டது என்று கூறிய Heiko Maas, பெய்ரூட் வெடி விபத்தில் தனது குடியிருப்பில் இருந்த நமது தூதரக அலுவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றார்.

நமது சக ஊழியரின் இழப்பு, நமது வெளியுறவு அமைச்சக ஊழியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார் அவர்.

அத்துடன் உயிரிழந்த ஊழியரின் உறவினர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துகொண்டார் அவர்.

பெய்ரூட் வெடி விபத்தில் 130 பேர் உயிரிழந்துள்ளதோடு 5,000 பேர் வரை காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்