சனிக்கிழமை முதல் ஜேர்மனியில் புதிய நடவடிக்கை அமல்! நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஜேர்மனி

உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த அச்சத்தில் இருக்கும் நிலையில் ஜேர்மனி புதிய நடவடிக்கை ஒன்றை அமல்படுத்துகிறது.

கிரீஸ், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் புதிய கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால் இரண்டாவது அலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை முதல் ஜேர்மனிக்கு வரும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை கட்டாயமாக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களில் முதன் முறையாக ஜேர்மனியில் 1,000 புதிய கொரோனா வழக்குகளுக்கு மேல் பதிவான பின்னர் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்,

வெளிநாட்டிலிருந்து திரும்பும் பயணிகளின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பத்தில் மக்களிடையே மெத்தனமான மனப்பான்மை இருப்பதாகவும் ஸ்பான் குற்றம் சாட்டினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்