பெய்ரூட் வெடி விபத்து: காயமடைந்த ஜேர்மன் தூதரக ஊழியர்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் ஜேர்மன் தூதரக அலுவலர்களும் காயமடைந்துள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று மாலை பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நிகழ்ந்த அந்த வெடி விபத்தில், குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகத்திற்கு சற்று தொலைவிலேயே அமைந்துள்ள ஜேர்மன் தூதரக அலுவலகமும் சேதமடைந்துள்ளது என்றாலும், அது எந்த அளவு சேதமடைந்துள்ளது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

அந்த வெடி விபத்து குறித்து கேள்விப்பட்ட ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, லெபனானுக்கு உதவுவதாகவும் வாக்களித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்