ஜேர்மனியில் இறந்துகொண்டிருந்த அண்ணனை காணச் சென்ற போப் உடல் நிலை கடும் பாதிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் இறந்துகொண்டிருந்த தனது அண்ணனைக் காணச் சென்ற முன்னாள் போப் பெனடிக்டின் நிலைமை மோசமாக இருப்பதாக அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிவருபவர் தெரிவித்துள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணத்தருவாயிலிருந்த தனது அண்ணன் Georg Ratzingerஐக் காண்பதற்காக ஜேர்மனியின் பவேரியாவுக்கு சென்றிருந்தார் போப் பெனடிக்ட் (93).

அண்ணனை சந்தித்துவிட்டு போப் பெனடிக்ட் வாட்டிகன் திரும்பிய நிலையில், ஜூன் 29ஆ திகதி தனது 96ஆவது வயதில் உயிரிழந்தார் Georg.

இந்நிலையில், போப் பெனடிக்ட் அம்மை நோயின் இரண்டாவது தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள அவர் மிகவும் பெலவீனமாக இருப்பதால் அவரால் சரியாக பேச முடியவில்லை என்றும் அவரது அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிவருபவரான ஜேர்மனியில் வாழும் Peter Seewald தெரிவித்துள்ளார்.

மிகவும் நெருக்கமான சகோதரர்களான போப் பெனடிக்டும் Georgம், 1951ஆம் ஆண்டு ஒரே நாளில் தங்கள் வாழ்க்கையை இறைப்பணிக்காக ஒப்புக்கொடுத்து பாதிரிப்பட்டம் பெற்றவர்களாவர்.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெனடிக்ட் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, Georg வருத்தப்பட்டாராம், காரணம், இனி தம்பியை நினைத்த நேரத்தில் சந்திக்கமுடியாதே என்பதுதானாம்!

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்