’கட்டுப்பாடுகளை தளர்த்து’ பெர்லினில் குவிந்த ஆயிரக்கணக்கானோரால் ஸ்தம்பித்த நகரம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் கொரோனா பரவலை எதிர்கொள்ள அரசு கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி பெர்லின் நகரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெர்லின் நகரில் சனிக்கைழமை முன்னெடுக்கப்பட்ட பேரணியில், சுமார் 20,000 பேர் கலந்து கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்க, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் குவிந்ததாக பேரணியை ஒருங்கிணைத்த நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கூட்டம் ஒருகட்டத்தில் கட்டுக்கடங்காமல் போகவே, பேரணிக்குள் புகுந்த பொலிசார் கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர்.

மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் பலரை மேடையில் இருந்து இழுத்து வெளியேற்றியுள்ளனர். ஒருவர் மறுக்கவே, பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்து கொண்ட எவரும் மாஸ்க் அணியவோ, சுத்தம் பேணவோ இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கூட்டத்தை கலைக்க முயன்று தோல்வி கண்ட பொலிசார், பின்னர் வன்முறை கூடாது எனவும், அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவாக பதிவு செய்யப்படுவதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் வன்முறையாளர்கள் மீது பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

பேரணியில் ஜேரமனியின் பல்வேறு மாகாணத்தில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என பலரும் முழக்கமிட்டுள்ளனர்.

கொரோனா என்பதே ஒரு கட்டுக்கதை எனவும், இது பொதுமக்கள் மீதான அடக்குமுறை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்