வன்கொடுமை வழக்கில் புலம்பெயர்ந்தவரை விடுவித்த நீதிமன்றம்: மீண்டும் அவர் செய்த மோசமான செயலால் கொந்தளிக்கும் ஜேர்மனி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த புலம்பெயர்ந்த ஒருவரை நீதிமன்றம் 12 நாட்களில் விடுவிக்க, கடந்த வெள்ளிக்கிழமை அவர் மீண்டும் ஒரு 13 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளதால் ஜேர்மனியே கொந்தளித்துப்போயுள்ளது.

Zubyr S (23) என்னும் ஆப்கனைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர் ஒருவர், 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

ஆனால், அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்பில்லை என்று கூறி, 12 நாட்களில் அவரை விடுவித்தது நீதிமன்றம்.

ஆனால், விடுவிக்கப்பட்ட ஐந்து வாரங்களுக்குள் அவர் மீண்டும் ஒரு 13 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார்.

இந்த சம்பவம் ஜேர்மனியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனே அவரை நாடு கடத்தவேண்டும் என அரசியல்வாதிகள் குரல் எழுப்பியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்