அழகிய இளம்பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த மேட்லின் கடத்தல் குற்றவாளி: முதன் முறையான வெளியான வீடியோ!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய சிறுமி கடத்தல் வழக்கில் முதன்முறையாக குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபர், குழந்தையை கடத்த பயன்படுத்தியதாக கருதப்படும் வேனில் அழகிய இளம்பெண் ஒருவருடன் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

13 ஆண்டுகளுக்கு முன், 3 வயதாக இருக்கும்போது காணாமல் போனாள் பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேன்.

ஆனால், அவளைக் கடத்தியதாக கருதப்படும் நபர் தொடர்பாக புகைப்படங்களோ, வீடியோக்களோ இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், குழந்தை மாயமான அதே இடத்தில், கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அதே வேனில், குற்றவாளி என கருதப்படும் Christian Brueckner பயணிக்கும் வீடியோ ஒன்று முதன்முறையாக வெளியாகியுள்ளது.

2007ஆம் ஆண்டு, மேட்லின் கடத்தப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு, Brueckner அதே வேனில், மூன்று இளம் பயணிகளுடன் ஜோக்கடித்து சிரித்துக்கொண்டு பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

போர்ச்சுகல்லிலிருந்து ஸ்பெயின் சென்ற ஜேர்மனியைச் சேர்ந்த ஒரு அழகிய இளம்பெண் மற்றும் இரு இளைஞர்களுக்கு 175 மைல் தூரம் லிப்ட் கொடுத்துள்ளான் அவன்.

வயது வித்தியாசமே இல்லாமல் பெண்களைக் குறிவைக்கும் அவனிடமிருந்து அந்த அழகிய

இளம்பெண் எப்படி தப்பினார் தெரியவில்லை.

மேட்லின் கடத்தப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும், அந்த மூன்று பயணிகளில் ஒருவரான தாமஸ் என்பவர், 13 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கு லிப்ட் கொடுத்தவர் மேட்லின் வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது தெரிந்ததும் தாங்கள் திகிலடைந்ததாக தெரிவித்துள்ளர்.

இதே வேனில் அந்த சிறுமி சில வாரங்களுக்குப்பின் கடத்தப்பட்டாள் என்று அறிந்ததும் எனக்கு வாந்தி வருவது போல் இருக்கிறது என்று கூறியுள்ளார் தாமஸ்.

அவரை புகைப்படம் எடுக்கும்போது கூட, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறும் தாமஸ், வயது முதிர்ந்த ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த, குழந்தைகளை குறிவைக்கும் மோசமான நபர் அவர் என அவரைப் பார்க்கும்போது தெரியவில்லை என்கிறார்.

அவர் உண்மையில் இப்படிப்பட்ட ஒரு ராட்சதன் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை என்கிறார் தாமஸ்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்