நான் ஒரு சடலத்தின் மீது தூங்குவது போல் உணர்கிறேன்... பிரித்தானிய சிறுமி வழக்கில் மேலும் ஒரு கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் ஜேர்மனியில் மேலும் ஒரு இடத்தில் மதுபான சேமிப்பகம் ஒன்றை தரைக்கு கீழ் தோண்டி உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேனை தவறவிட்டனர் அவளது பெற்றோர்.

சிறுமியின் உடல் இன்று வரை கிடைக்காத நிலையில், சமீபத்திய கண்டுபிடிப்பாக, அவளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் Christian Brueckner (43) ஜேர்மனியில் தான் தங்கியிருந்த Hanover என்ற இடத்தில், வீட்டுக்கு கீழே ஒரு மதுபான சேமிப்பகத்தை உருவாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இடத்தை தோண்டி ஆதாரங்கள் பலவற்றைக் கைப்பற்றிய பொலிசார், மணலைப்போட்டு அந்த சேமிப்பகத்தை மூடிவிட்டனர்.

தற்போது Braunschweig என்ற இடத்திலும் அதேபோல் ஒரு சேமிப்பகம் தரைக்கு கீழ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Braunschweigஇல் உள்ள ஒரு வீட்டில், Bruecknerம் அவனது காதலியும் 2013இலிருந்து 2016 வரை வாழ்ந்திருக்கிறார்கள்.

Brueckner அந்த பகுதியில் வாழ்ந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த Inga Gehricke என்ற ஐந்து வயது சிறுமி மாயமானது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் Brueckner அந்த பகுதியில் வாழ்ந்தபோது, தரைக்கடியில் ஒரு மதுபான சேமிப்பகத்தை உருவாக்குவதற்காக பள்ளம் தோண்டியதை தான் கண்டதாக பக்கத்து வீட்டில் வாழும் Manfred Richter (80) என்பவர் தெரிவித்துள்ளார்.

Brueckner, 2016ஆம் ஆண்டு அவசர அவசரமாக அந்த வீட்டை விற்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளான்.

அவன் இருந்த வீட்டை வாங்கி, தற்போது அங்கு வாழும் Sabine Sellig என்ற பெண் கூறும்போது, ஒரு சடலத்தின் மீது தூங்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது, அது எனக்கு கவலையை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

அதாவது காணாமல் போன குழந்தையின் உடல் தன் வீட்டுக்கு கீழ் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சும் அவர், தன் வீட்டுக்கு கீழ் உள்ள இடத்தையும் தோண்டி ஆய்வு செய்யுமாறு பொலிசாரை வேண்டிக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், அந்த பகுதியில் போர்வெல் வகை கிணறு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளார்கள் ஜேர்மன் பொலிசார்.

அடுத்து என்ன செய்யப்போகிறார்கள், அந்த பகுதியில் தரைக்கு கீழ் உள்ள மதுபான சேமிப்பகத்தையும் தோண்டப்போகிறார்களா, அந்த கிணற்றில் ஆய்வு செய்யப்போகிறார்களா என்பது குறித்து கூற பொலிசார் மறுத்துவிட்டார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்