ஜேர்மனியில் பூமிக்கடியில் மறைந்திருந்த மதுபான சேமிப்பகம்: ஆய்வுக்குப் பின் பொலிசார் செய்த செயல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய சிறுமி மேட்லின் போர்ச்சுகல்லில் மாயமான வழக்கு தொடர்பாக குற்றவாளி தங்கியிருந்த இடத்தில் ஆய்வு செய்த பொலிசார், தரைக்கடியில் ஒரு மதுபான சேமிப்பகம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

பிரித்தானிய சிறுமி மேட்லின் மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் Christian Brueckner, போர்ச்சுகல்லில் சிறுமி மாயமானபின், ஜேர்மனியில் ஒரு இடத்தில் வந்து ரகசியமாக தங்கியிருந்திருக்கிறான்.

அக்கம் பக்கத்தவர்கள் கேட்டதற்கு, தான் ஐரோப்பாவுக்கு சென்று விடுவேன், அதனால்தான் இந்த இடத்தை உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவு செய்யவில்லை என்று கூறியிருக்கிறான் Brueckner.

Brueckner தங்கியிருந்த இடத்தை ஆய்வு செய்த பொலிசார், தரைக்கடியில் இருந்த ஒரு மதுபான சேமிப்பகத்தில் ஆய்வு நடத்தினார்கள்.

ஆய்வில் கிடைத்த ஏராளம் பொருட்களை கொண்டு சென்ற பொலிசார், ஆனால் தாங்கள் என்ன தேடுகிறோம், என்ன கண்டுபிடித்தோம் என்பதை தெரிவிக்கவில்லை. அந்த பகுதியிலிருந்த பொருட்கள் முற்றிலும் அகற்றப்பட்டபின், அந்த இடத்தை மணல் போட்டு மூடிவிட்டார்கள் பொலிசார்.

அந்த பகுதியைச் சுற்றி இப்போது பொலிஸ், உள்ளே நுழையவேண்டாம் என்று கூறும் ஒரு டேப் மட்டும் உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்