ஜேர்மனிக்கு மிகப்பெரிய சரிவு..! ‘10 ஆண்டுகால வளர்ச்சி அழிந்துவிட்டது’: அம்பலப்படுத்திய நாட்டின் புள்ளிவிவர அலுவலகம்

Report Print Basu in ஜேர்மனி

ஐரோப்பாவில் மிகப்பெரிதான ஜேர்மனியின் பொருளாதாரம் கொரோனா வைரஸால் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 10.1% சரிந்தது.

இந்த வீழ்ச்சி அரை நூற்றாண்டில் மிகப்பெரியது மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்ததை விட மோசமானதாகும்.

உபகரணங்கள், இயந்திரங்கள், வீட்டுச் செலவுகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக நாட்டின் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சரிவு கிட்டத்தட்ட 10 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சியை அழித்துவிட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடான ஜேர்மனி, கொரோனாவால் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட இடையூறால் சீர்குலைவுக்கு ஆளாகியுள்ளது

முந்தைய காலாண்டில் ஜேர்மனியின் பொருளாதாரம் ஏற்கனவே 2% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்