தயவுசெஞ்சு இந்த ஊருக்கெல்லாம் போயிடாதீங்க..! நாட்டு மக்களுக்கு தெரிவித்த ஜேர்மனி

Report Print Basu in ஜேர்மனி

ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ஜேர்மனி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரகோன், கேடலோனியா மற்றும் நவர்ரா ஆகிய பிராந்தியங்களில் அதிக கொரோனா வழக்குகள் மற்றும் உள்ளூர் ஊரடங்கு காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் குறித்த பிராந்தியங்களில் வழக்குகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன, ஆனால் பெரும்பாலான பிராந்தியங்களில் நோய்த்தொற்றுகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஜேர்மனியின் ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) நாடு முழுவதும் சமீபத்திய வழக்குகள் அதிகரிப்பதற்கு அலட்சியமே காரணம் என கூறியுள்ளது.

ஜேர்மனியில் புதிய வழக்குகளின் எண்ணிக்கை செவ்வாயன்று 633 ஆக அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்