ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான ஷூக்கள் மாயம்: திருடன் யார் என தெரியவந்தபோது...

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான ஷூக்கள் மாயமான நிலையில், திருடன் யார் என தெரியவந்தபோது மக்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.

பெர்லினுக்கருகில் உள்ள Zehlendorf பகுதியில் அடிக்கடி ஷூக்கள் மாயமான வண்ணம் இருந்தன.

வீடுகளுக்கு வெளியே ஷூக்களை கழற்றிப்போட்டால் அவை காணாமல் போய்விடும். யார் இந்த ஷூ திருடன் என மக்கள் குழம்பியிருந்த நேரத்தில்தான், Christian Meyer என்பவர் ஷூக்கள் காணாமல் போகும் மர்மத்தைக் கண்டுபிடித்தார்.

Meyer ஒரு நாள், ஓடுவதற்கு தான் பயன்படுத்தும் ஷூக்கள் மாயமானதை உணர்ந்து அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் நோட்டீஸ் போர்டில் தனது ஷூக்கள் காணாமல் போனதாக எழுதிவைத்தார்.

அப்புறம்தான் அவருக்கு தெரிந்தது, காணாமல் போனது தனது ஷூக்கள் மட்டும் அல்ல என்பது... அப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 100 ஷூக்கள் வரை காணாமல் போயிருந்தன. அதன் பிறகு யார் இந்த ஷூ திருடன் என்பதை அறிவதற்காக கவனமாக காத்திருந்தார் Meyer.

அப்போது, ஒரு நாள் திருடன் கையும் களவுமாக சிக்க, ஒரு ஜோடி ஷூக்களுடன் திருடன் சிக்கியாயிற்று என புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டார் Meyer.

பிடிபட்ட திருடன்... ஷூக்களை திருடும்போது கையும் களவுமாக சிக்கியது மனிதன் அல்ல, ஒரு நரி... அதற்குப்பின் அந்த நரி ஷூக்களை மறைத்து வைத்திருந்த இடத்தைக் கண்டுபிடித்து மக்களுடைய ஷூக்கள் சிலவற்றைக் கைப்பற்றினாலும், Meyerஇன் ஷூக்கள் மட்டும் கிடைக்கவில்லையாம்...

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்