ஜேர்மன் பாடசாலை ஒன்றில் 3 சிறுவர்களால் ஏற்பட்ட பேரிழப்பு: எவ்வளவு தொகை தெரியுமா?

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் லோயர் சாக்சனி மாநிலத்தில் பாடசாலை ஒன்றை 3 சிறார்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பில் அந்த சிறுவர்கள் பொலிசாரிடம் சிக்கியிருந்தாலும், அவர்களின் வயது காரணம் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லோயர் சாக்சனி மாநிலத்தில் Bissendorf பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றையே குறித்த மூன்று சிறார்களும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஞாயிறன்று மாலை நடந்த இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு பொலிசார் வரும் முன்னரே அந்த சிறுவர்கள் மாயமாகியிருந்தனர்.

பாடசாலையில் சுவற்றில் சாயம் பூசியும், ஜன்னல் மற்றும் கதவுகளை சேதப்படுத்தியும், சில பகுதியில் சுவற்றை சேதப்படுத்தியும் உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கலவரத்தில் ஈடுபட்ட அந்த மூன்று சிறார்களும், 11 மற்றும் 12 வயதுடையவர்ள், பொலிசாரின் கண்காணிப்பில் உள்ளவர்கள் என தெரியவந்தது.

இதனையடுத்து, துரிதமாக செயல்பட்ட பொலிசார், ஒரு சிறுவனை சோளக்காடு ஒன்றிலும், எஞ்சிய இருவரை அவர்களின் குடியிருப்பு அருகேயும் பொலிசாரிடம் சிக்கினர்.

இவர்கள் மூவரும் கடந்த மே மாதத்தில் இருந்தே தாங்கள் படித்துவரும் அந்த பாடசாலையை சேதப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மொத்த 150,000 யூரோ அளவுக்கு இவர்கள் மூவரும் சேதத்தை ஏற்படுத்தியதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் இவர்களை தண்டிக்க முடியாது என்றாலும், இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார்கள் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்