வீட்டின்மேல் விழுந்து நொறுங்கிய விமானம்: தாயை பறிகொடுத்து தவிக்கும் சிறு குழந்தை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மேற்கு ஜேர்மனியில் வீடு ஒன்றின் மீது சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அந்த வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.

அந்த வீட்டில், பெண் ஒருவரும் அவரது இரண்டு வயது குழந்தையும் வாழ்ந்து வந்துள்ளனர்.

விமானம் விழுந்து வீடு தீப்பிடித்து எரிந்ததில், அந்த இளம் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறு காயங்களுடன் தப்பிய அந்த குழந்தை, தாயை இழந்து ஆதரவின்றி தவிக்கிறது. இதற்கிடையில், அந்த விமானத்தில் பயணித்த இரண்டு பேரும் கூட உயிரிழக்க, பலியானோர் எண்ணிக்கை மூன்றாகியுள்ளது.

Wesel நகரில் நிகழ்ந்த இந்த விபத்து எதனால் நேரிட்டது என்று தெரியாத நிலையில், பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்