ஜேர்மன் பண்ணையில் கிட்டத்தட்ட 500 பேர் அடைத்து வைப்பு! வெளியான காரணம்

Report Print Basu in ஜேர்மனி
741Shares

ஜேர்மனியில் உள்ள ஒரு பண்ணையில் புதிய கொரோனா வைரஸ் பரவிய பின்னர் அதிகாரிகள் தனிமைப்படுத்தலை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், கிட்டத்தட்ட 500 பேர் பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, 174 அறுவடைத் தொழிலாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது, இது கொரோனா வழக்குகள் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

பண்ணையில் இஇருந்து யாரும் வெளியேறாமல் இருக்க ஒரு பாதுகாப்பு சேவை பணியமர்த்தப்பட்டுள்ளது என்று Dingolfing-Landauபிராந்தியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் ஜேர்மனியில், புதிய கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 815 ஆக கடுமையாக உயர்ந்தது, இது மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையாகும், மேலும் சனிக்கிழமை 781 புதிய வழக்குகள் பதிவானது.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் துருக்கி போன்ற அதிக ஆபத்துள்ள இடங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு அரசாங்கம் கட்டாய சோதனையை அறிமுகப்படுத்தக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்