ஜேர்மனியில் பயங்கரம்... பாதசாரிகள் மீது அதிவேகமாக மோதிய வாகனம்! பலர் படுகாயம் என தகவல்

Report Print Santhan in ஜேர்மனி
383Shares

ஜேர்மனியில் இரயில் நிலையத்திற்கு வெளியே பாதசாரிகள் மீது கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் பலர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் தலைநகர் பெர்லினின் Hardenbergplatz-ல் உள்ள Bahnhof விலங்கியல் கார்டன் இரயில் நிலையத்திற்கு வெளியே இன்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு கருப்பு நிற மெர்சிடிஸ் கார் ஒன்று அங்கிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த சம்பவம் காரணமாக 7 பேர் காயமடைந்திருப்பதாகவும், அதே சமயம் ஒருவர் வாகனத்திற்கு அடியில் சிக்கியிருப்பதாக BILD News தெரிவித்துள்ளது.

பெர்லின் தீயணைப்பு துறை டுவிட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், இரண்டு ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Foto: Spreepicture

அதுமட்டுமின்றி வெடி குண்டு கண்டறியும் மோப்ப நாய்களுடன் சுமார் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Picture: Reuters)

பெர்லின் தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து இன்னும் எந்த ஒரு தெளிவான காரணமும் தெரியவில்லை.

(Picture: EPA)

ஒரு கார் சாலையில் இருந்து இறங்கி, நடைபாதையில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

(Picture: Reuters)

சம்பவ இடத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் செய்தி தளம் தெரிவித்துள்ளது.

காவல்துறை செய்தித் தொடர்பாளர், வாகன ஓட்டியினர் மிக வேகமாக வாகனம் ஓட்டியதாலும், காரின் கட்டுப்பாட்டை இழந்ததாலும் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்த விபத்து அரசியல் ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இப்போது கிடைக்கவில்லை, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Foto: Spreepicture


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்