பாக்தாதில் கடத்தப்பட்ட ஜேர்மன் இளம்பெண் விடுவிப்பு: வெளிவராத மர்மம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பாக்தாதில் கடத்தப்பட்ட ஜேர்மன் இளம்பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எதற்காக கடத்தப்பட்டார், அவரை கடத்தியது யார் என்ற விடயங்கள் மர்மமாகவே நீடிக்கின்றன.

இளம் கலைஞர்களின் படைப்புகளை வெளி உலகுக்கு காட்டுவது தொடர்பான பணி செய்யும் Hella Mewis என்ற ஜேர்மானிய இளம்பெண் அடையாளம் தெரியாத நபர்களால் திங்கட்கிழமை கடத்தப்பட்டார்.

இந்நிலையில், ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளரான Yahya Rasool வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், Hella Mewis பாதுகாப்புப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், டிசம்பர் 31 அன்றும் பிரான்ஸ் நாட்டவரான பத்திரிகையாளர்கள் இருவர் கடத்தப்பட்டு 36 மணி நேரம் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டார்கள். இரண்டு தொண்டு நிறுவன ஊழியர்கள் இரண்டு மாதங்கள் கடத்திவைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால், இதுவரை எந்த சம்பவங்களிலும் யார் கடத்தியது, அவர்கள் எதற்காக கடத்தப்பட்டார்கள் என்பது போன்ற விடயங்கள் இன்னமும் மர்மமாகவே நீடிக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்