கொரோனாவைக் கண்டறிய ஜேர்மனி கண்டுபிடித்துள்ள புதிய செயல்முறை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கொரோனா தொற்றியவர்கள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கும், நோய் தொற்றாதவர்கள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கும் ராணுவ மோப்ப நாய்களால் வித்தியாசம் கண்டறிய முடியும் என ஜேர்மன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

அவை மிகத்தெளிவாக கொரோனா நோய் தொற்றிய மாதிரிகளை கண்டறிவதால், இந்த செயல்முறையை உண்மையான நோயாளிகளிடமும் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Hanover கால்நடை மருத்துவ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.

ஜேர்மன் ராணுவத்திலுள்ள எட்டு மோப்ப நாய்களுக்கு ஒரு வாரம் மட்டுமே கொரோனா தொற்றிய மற்றும் தொற்றாதவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், அவை மிக நேர்த்தியாக கொரோனா தொற்றியவர்களின் மாதிரிகளைக் கண்டுபிடித்துள்ளன.

1,000 மாதிரிகளைக் கொண்டு சோதனையிட்டதில், மோப்பநாய்களை கொரோனா தொற்றியவர்களை அடையாளம் காண்பதில் பயன்படுத்த முடியும் என்று அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

என்றாலும், இந்த ஆய்வு இன்னமும் ஆரம்ப கட்டத்தில்தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்