கொரோனா இன்னமும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், கடற்கரை ஒன்றில் கூட்டம் கூட்டமாக ஜேர்மானியர்கள் கூடி பார்ட்டிகள் கொண்டாடும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஐரோப்பிய யூனியன் எல்லைகள் திறந்ததும் ஜேர்மானியர்கள் அதிகம் விரும்பும் கடற்கரையான ஸ்பெயினிலுள்ள Mallorca கடற்கரையில் ஜேர்மானியர்கள் பார்ட்டிகளுக்காக கூட்டம் கூட்டமாக கூடும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
இதனால் இரண்டாவது கொரோனா அலை உருவாகலாம் என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தயவு கூர்ந்து மீண்டும் கொரோனா தோற்றுக்கள் அதிகமாவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் மக்களை அறிவுறுத்திவருகிறார்.
„Wir sollten wachsam bleiben und nicht übermütig werden“, appelliert @JensSpahn in der #Bundespressekonferenz.
— BMG (@BMG_Bund) July 13, 2020
கொரோனா தொற்றுக்கள் உருவாவதை தடுக்கவேண்டும், குறிப்பாக இந்த விடுமுறை சீசனில் என்று கூறியுள்ள Jens Spahn, குளிர்காலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகுவதை பார்க்கவேண்டிய சூழலை ஏற்படுத்தவேண்டாம்.
ஒரு சமுதாயமாக நம்மால் இதை தடுக்கமுடியும், நாம் ஏற்கனவே அதை செய்துள்ளோம் என்கிறார் அவர்.
சமூக விலகல் விதிகளுக்கு இணங்கவும், கூட்டங்களை தவிர்க்கவும் அவர் மக்களை வலியுறுத்துயுள்ளார்.
வார இறுதியில் மக்கள் Mallorca கடற்கரையில் கூடும் ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள் குறித்து தான் கவலையடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுடைய பொறுமையின்மையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால், எங்கெல்லாம் பார்ட்டிகள் நடத்துகிறார்களோ அங்கெல்லாம் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்றார் அவர்.