கொரோனா பரவிய ஜேர்மன் நகரமொன்றில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சமீபத்தில் கொரோனா பரவல் ஏற்பட்ட நகரம் ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டபின், Gütersloh நகரிலுள்ள இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுவோருக்கு கொரோனா பரவியதையடுத்து, அங்கு ஜூன் மாதம் 23ஆம் திகதி மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதுதான் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டபின் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும்.

Gütersloh நகரிலுள்ள Tönnies இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை என்னும் தொழிற்சாலையில் பணிபுரியும் 2,000 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.

ஆகவே, மேலும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அங்கு ஜூன் மாதம் 23ஆம் திகதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு ஜூன் 30ஆம் திகதி காலாவதியாகும் நிலையில், தற்போது அது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் ஜூலை 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Gütersloh நகரில், கடந்த ஏழு நாட்களில் 100,000 பேருக்கு 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்