ஜேர்மன் Bonn ரயில் நிலையத்தில் திடீரென்று குவிக்கப்பட்ட பொலிஸ்: வெளியேற்றப்பட்ட மக்கள்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் முதன்மை ரயில் நிலையங்களில் ஒன்றான Bonn ரயில் நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்து பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக Bonn ரயில் நிலையம் மூடப்பட்டதால், ரயில்கள் அனைத்தும் அருகாமையில் உள்ள நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணையின் காரணமாக Bonn மத்திய ரயில் நிலையம் மூடப்பட்டதாக ஜேர்மன் ரயில்வே ஆபரேட்டர் Deutsche Bahn ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாகவே Bonn ரயில் நிலையம் மூடப்பட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில்,

பொலிசாரால் இதுவரை வெடிகுண்டு தொடர்பான எந்தப் பொருளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Bonn ரயில் நிலையம் மூடப்பட்டதால், அருகாமையில் உள்ள Beuel ரயில் நிலையத்திற்கு ரயிகள் அனைத்தும் திருப்பி விடப்பட்டுள்ளன.

பொலிசார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் காத்திருக்க வேண்டும் எனவும், 30 நிமிடங்களுக்கும் மேலாக தாமதம் நேரலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்