இந்திய கணவரை மீண்டும் திருமணம் செய்து கொண்ட ஜேர்மன் பெண்... காரணம் என்ன? வைரல் புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியை சேர்ந்த பெண், இந்தியரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் அவரை உள்ளூர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமாதாபத்தை சேர்ந்தவர் நித்தின். இவருக்கு ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னரே திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது.

இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டுக்கு பணி விடயமாக நித்தின் சென்ற போது அங்கு ஜேர்மனியை சேர்ந்த அலானா என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

இருவரும் நட்பான பின்னர் அது காதலாக மாறியது, இதையடுத்து நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் நித்தினும், அலானாவும் ஜேர்மனிக்கு சென்று அங்கு வசித்து வந்தனர்.

இந்த சூழலில் 8 வருடம் கழித்து இந்திய பாரம்பரியபடி மீண்டும் கணவரை திருமணம் செய்து கொள்ள அலானாவுக்கு ஆசை ஏற்பட்டது.

அதன்படி தம்பதிகள் குஜராத்துக்கு கடந்த 22ஆம் திகதி வந்தனர்.

இதையடுத்து உள்ளூர் பாரம்பரிய முறைப்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் மீண்டும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதை பார்த்த மணப்பெண் அலானா மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்