நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை... ஐரோப்பாவுக்கு 60 பில்லியன் டொலர்கள் இழப்பு: பின்னால் இருவர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை என சர்வதேச பத்திரிகைகளால் குறிப்பிடப்படும் ஐரோப்பாவின் வரி ஏய்ப்பு வழக்கில் இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது.

30 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்டுள்ள ஜேர்மனி இந்த வழக்கு விசாரணையை துவக்கியுள்ளது, இழந்த தொகையை மீட்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

வங்கி ஊழியர்களான இருவர் ஒன்றிணைந்தே பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுமார் 60 பில்லியன் டொலர் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.

நியூசிலாந்து நாட்டவரான பால் மோரா என்பவரும் அயர்லாந்து நாட்டவரான மார்ட்டின் ஷீல்ட்ஸ் என்பவருமே இந்த கொள்ளையின் முக்கிய புள்ளிகள்.

cum-ex வர்த்தகம் மூலமே இருவரும் பல்வேறு ஐரோப்பிய அரசாங்க கஜானாவில் கோடிகளின் இழப்பை ஏற்படுத்தினர்.

ஜேர்மனி மட்டுமின்றி பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரியா, நோர்வே, பின்லாந்து, போலந்து மற்றும் பல நாடுகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

2006 முதல் 2011 வரை இந்த வரி ஏய்ப்பு கொள்ளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பால் மோரா மற்றும் மார்ட்டின் ஷீல்ட்ஸ் ஆகியோரின் உதவியுடன் பல்வேறு நிறுவனங்களும், வங்கிகளும் இதுபோன்ற வரி ஏய்ப்பு முறைகேடில் ஈடுபட்டுள்ளது தெரியவந்த நிலையில்,

அவர்களிடம் இருந்தும் அபராதம் வசூக்கி அதிகாரிகள் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஜேர்மனியின் வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் ஒருபகுதியாகவே இந்த மிப்பெரும் கொள்ளை அம்பலமானது.

தொடர்ந்து பால் மோரா மற்றும் மார்ட்டின் ஷீல்ட்ஸ் பணியாற்றிய வங்கிகளிலும், இவர் பின்னர் துவங்கிய வர்த்தக நிறுவனத்திலும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மார்ட்டின் ஷீல்ட்ஸ் ஜேர்மனி அதிகாரிகளிடம் சிக்கினார். ஆனால் பால் மோரா நியூசிலாந்துக்கு தப்பினார்.

கடந்த செப்டம்பர் முதல் மார்ட்டின் ஷீல்ட்ஸ் தொடர்பான விசாரணை மூனெடுக்கப்பட்டு வருகிறது.

டிசம்பர் மாதம் பால் மோராவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதியப்பட்டது. அதே வேளை, தாங்கள் இருவரும் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்துவிடவில்லை என பால் மோரா பதிலளித்துள்ளார்.

விசாரணை முடிவுக்கு வந்து இருவரும் குற்றவாளிகள் என நிரூபணமானால், பல பில்லியன் டொலர் அபராதம் சுமத்தப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்