மருத்துவர் என்று கூறி பணம் தருவதாக ஆசை காட்டி இளம்பெண்களை ஏமாற்றிய ஜேர்மானியர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தான் ஒரு மருத்துவர் என்றும், தனது ஆராய்ச்சிக்கு உட்பட சம்மதித்தால் பணம் தருவதாகவும் கூறி பல இளம்பெண்களை ஏமாற்றிய ஜேர்மானியர் ஒருவருக்கு முனிச் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

டேவிட் (30) என்பவர் இளம்பெண்களை துன்பப்படுத்தி, அதிலிருந்து பாலியல் இன்பம் காணும் மன நோய் கொண்டவர்.

13 வயதுடைய சிறுமி முதல் இளம்பெண்கள் வரை தொடர்பு கொண்ட டேவிட், தான் ஒரு மருத்துவர் என்றும் தனது ஆய்வுக்கு சம்மதித்தால் பணம் தருவதாகவும் கூறி பெண்களுக்கு ஆசை காட்டியுள்ளார்.

உண்மையாகவே பணத்தேவை கொண்ட பல இளம்பெண்கள் டேவிட்டின் வலையில் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.

அவர்களுக்கு 200 முதல் 3,000 பவுண்டுகள் வரை கொடுத்துள்ளார் டேவிட். தான் தேர்ந்தெடுக்கும் இளம்பெண்களின் உடலில் ஒயர்களை பொருத்திக்கொண்டு மின்சாரம் பாய்ச்சவேண்டும், இதுதான் டேவிட் செய்யச் சொன்ன சோதனை.

அந்த இளம்பெண்கள், தலையின் இரண்டு பக்கமும் இரண்டு ஒயர்கள், பாதங்களில் இரண்டு ஒயர்களுடன் இணைக்கப்பட்ட ஸ்பூன்களை மின்னிணைப்புடன் இணைக்கவேண்டும்.

அவர்கள் மின்சாரத்தால் தாக்கப்பட்டு துடிப்பதை, ஸ்கைப் மூலம் பார்த்துக்கொண்டே பாலியல் இன்பம் அனுபவிப்பார் டேவிட்.

பணத்தேவையிலிருந்த ஒரு 27 வயது இளம்பெண், டேவிட் சொன்னதுபோல் செய்ய, மின்சாரம் தாக்கி, அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, கையில் கொப்புளம் வந்து, மூச்சு விடமுடியாமல் தரையில் விழுந்து கிடந்திருக்கிறார்.

நடந்ததை யாரும் புகாரளிக்க முன்வராத நிலையில், 16 வயது இளம்பெண் ஒருவர், டேவிட்டின் சோதனையின்போது மின்சாரம் தாக்கி சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விசாரித்தபோது அந்த பெண் நடந்ததைக் கூற, மருத்துவர்கள் பொலிசாரிடம் புகாரளிக்க, சிக்கிக்கொண்டுள்ளார் டேவிட்.

டேவிட்டின் சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு மன நோய் என்பதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோர, அதை ஏற்க மறுத்த நீதிபதி, 230 வோல்ட் மின்சாரம் ஒருவரைக் கொல்லக்கூடியது என்பது தெரிந்தும் அதை பயன்படுத்தச் சொன்ன டேவிட் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளார்.

டேவிட் மீது 13 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், உடலுக்கு மோசமான அளவில் காயம் ஏற்படுத்துதல், மருத்துவர் என ஏமாற்றியது என பல குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்