ஜேர்மன் ராணுவ அலுவலர் கையில் கிடைத்த முக்கிய ஆவணம்... ரகசியமாக ஈரானிடம் ஒப்படைப்பு: அடுத்து நடந்தது?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் ராணுவத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்த ஒருவர் கையில், முக்கிய ராணுவ ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது.

அப்துல் என்ற அந்த ஜேர்மன் ஆப்கன் மொழிபெயர்ப்பாளர், ரகசியமாக அந்த ஆவணத்தை எடுத்துக்கொண்டுபோய், ஈரான் உளவாளி ஒருவரிடம் ஒப்படைத்தார்.

ஆனால், அந்த ஆவணத்தில் எதுவுமே இல்லை என்பது அவருக்கு தெரியாது. ஜேர்மன் அதிகாரிகள் அப்துலையும் அவரது மனைவி ஆசியாவையும் கைது செய்தனர்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், ஈரான் தனக்கு உளவு பார்க்கும் ஒருவரை ஜேர்மன் ராணுவத்தில் வைத்திருப்பதாக நட்பு நாடு ஒன்று ஜேர்மன் ராணுவ உளவுத்துறைக்கு ரகசிய எச்சரிக்கை ஒன்றை அனுப்பியது.

ஆராய்ந்ததில், அப்துல் என்பவர் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிற்கு பயணித்தபோதெல்லாம், மூத்த ஈரான் உளவாளி ஒருவரும் பயணித்தது தெரியவந்தது.

தங்கள் சந்தேகத்தை உறுதி செய்வதற்காக ராணுவம் வேண்டுமென்றே முக்கிய தகவல்கள் கொண்டது போல் தோன்றும் போலி ஆவணங்கள் சிலவற்றை கசியவிட்டது.

சரியாக அந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஈரானுக்கு தனது உளவாளி நண்பரை சந்திக்க அப்துல் செல்ல, வகையாக சிக்கினார் .

தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்.

ஜேர்மனியைப் பொருத்தவரை ஆயுள் தண்டனை என்பது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

அத்துடன், ஆரம்பம் முதலே கணவனுக்கு உதவியாக இருந்து ஊக்கமளித்துவந்த அப்துலின் மனைவி ஆசியாவுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்