ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கவர்ச்சி ட்வீட்டுக்கு எதிர்ப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், தான் வெளியிட்டிருந்த ட்வீட் ஒன்றிற்கு எதிர்ப்பு தோன்றியதையடுத்து மன்னிப்புக் கோரியதோடு அந்த ட்வீட்டையும் அகற்றிவிட்டது.

#SeduceSomeoneInFourWords என்பது ஒரு பிரபல ஹேஷ்டேக் ஆகும். பலரும் அதை நகைச்சுவையாக பயன்படுத்துவார்கள்.

அதாவது ’நான்கே வார்த்தைகளில் ஒருவரை மயக்குங்கள்’ என்று போட்டுவிட்டு, அது என்ன வார்த்தைகள் என மக்களின் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டு, பின்னர் காமெடியாக எதையாவது எழுதுவதுண்டு.

வாருங்கள், உங்களுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன், என்பது போல் கவர்ச்சியாக ஒன்றை எதிர்பார்த்து மக்கள் அதை ஆர்வமுடன் படித்தால், அதை கீழ், உங்களுக்கு பசிக்கிறதா? நான் சமைக்கிறேன் என்பதுபோல் ஏதாவது ஏடாகூடமாக அங்கு பதில் இருக்கும்.

தற்போது அதையே பயன்படுத்தி ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், விசா விண்ணப்பம் தொடர்பாக ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தது.

#நான்கே வார்த்தைகளில் ஒருவரை மயக்குங்கள் என்று போட்டுவிட்டு, அதன் கீழே, ’உங்கள் விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே ஜேர்மன் விசா பெறுவது கடினம் என்பதால், கடுப்பிலிருந்த மக்கள் தங்கள் எரிச்சலை வெளிப்படுத்தினார்கள்.

சட்டக்கல்லூரி மாணவரான Mamoun என்பவர், இன்னமும் படிப்பையே முடிக்காத நிலையில் எனக்கு ஜேர்மனியிலிருந்து இண்டெர்ன்ஷிப் கிடைத்திருந்தது.

நானும் ஆவணங்களையெல்லாம் தயார் செய்து அனுப்பிவிட்டு, விசாவுக்காக காத்திருக்க, இண்டெர்ன்ஷிப் தொடங்க இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு வெளியுறவு அமைச்சகத்திலிருந்து ஒரு செய்தி வந்தது - உங்கள் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது, நன்றி என்பதுதான் அது.

இப்படி மகா கடினமான விசா நடைமுறைகளை வைத்துக்கொண்டு ஜோக் ஒரு கேடு என கடுப்பாகிறார் அவர்.

அவரைப் போலவே பலரும் எரிச்சலாக, வெளியுறவு அமைச்சகம் மன்னிப்பும் கோரி, அந்த ட்வீட்டையும் அகற்றிவிட்டது!

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers