ஜேர்மனியில் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் 10,000 நோயாளிகள்: ஆதரவளிக்க மறுத்த நாடாளுமன்றம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
196Shares

ஜேர்மனியில் சுமார் 10,000 நோயாளிகள் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் நிலையில், தானம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக அமைச்சர் ஒருவர் கொண்டுவந்த மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க மறுத்துவிட்டனர்.

ஜேர்மனியில் 9,400 பேர் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டில், வெறும் 1000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த 2000 பேர் இறந்துபோனார்கள்.

எனவே, தானம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், மசோதா ஒன்றை ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

அந்த மசோதாவின்படி, ஜேர்மனியில் உள்ள அனைவருமே உடல் உறுப்புகள் தானம் செய்வோர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

யாராவது தனக்கு அது பிடிக்கவில்லையென்றால், அந்த பட்டியலிலிருந்து வெளியேறிவிடலாம்.

அதேபோல், யாராவது ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உறவினர்கள் தங்கள் உறவினரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மறுப்பு தெரிவித்தாலும் பட்டியலிலிருந்து அவர்களை நீக்கிவிடலாம்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டுவந்த மசோதாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அந்த இரண்டாவது மசோதாவின்படி, தங்கள் பாஸ்போர்ட் உட்பட அடையாள அட்டைகளை புதுப்பிக்க வருகிறவர்களிடம், உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா என கேட்கப்படும்.

ஆனால், அப்படி அடையாள அட்டையை புதுப்பிக்க வரும் எத்தனை பேர் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதிப்பார்கள் என கேள்வி எழுப்புகிறார் Jens Spahn.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்