ஜேர்மன் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் வலம் வந்த ஹிட்லர்: நடவடிக்கையில் இறங்கிய பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மோட்டார் சைக்கிள் திருவிழா ஒன்றின்போது, ஜேர்மன் சாலைகளில் ஹிட்லர் போல வேடமிட்டு வலம் வந்த ஒருவரை பிடிக்கும் நடவடிக்கைகளில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.

ஜேர்மனியில் பொது இடங்களில் நாசிக்கள் போல் உடையணிவது சட்ட விரோதமாகும்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிள் திருவிழா ஒன்றின்போது ஜேர்மன் சாலைகளில் ஒருவர் ஹிட்லர் போல் வேடமணிந்தும், அவர் அருகில் மற்றொருவர் இரண்டாம் உலகப்போர்க்கால ஜேர்மன் வீரர் போன்றும் உடையணிந்தும் வலம் வரும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

இப்படி மக்கள் ஹிட்லர் போல் வேடமிடும்போது, அவர்கள் மீது விசாரணையும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்கிறார் சாக்சனி பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர்.

மேலும், அந்த வீடியோவில், அந்த மோட்டார் சைக்கிளை அவர்கள் பொலிஸ் கார் ஒன்றின் அருகில் பார்க் செய்ய, அதன் அருகில் நிற்கும் பொலிசார் ஒருவர் அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி, தனது மொபைல் போனை எடுத்து அவர்களை புகைப்படமும் எடுக்கிறார்.

அருகிலுள்ள மக்கள் சிரிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. எனவே பொலிசாராக இருந்து கொண்டு இத்தகைய செயலில் ஈடுபட்ட அந்த பொலிசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்