ஜேர்மன் மேயருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்: அவர் எடுத்த முடிவு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் மேயர் ஒருவருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவர் எட்டாண்டுகள் வகித்து வந்த மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Estorf நகரின் மேயராக எட்டாண்டுகள் பதவி வகித்தவர் Arnd Focke (48). ஜேர்மன் தலைவர்கள் பலருக்கு வலது சாரியினரால் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்படும் விடயம் Fockeஇன் ராஜினாமாவால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜேர்மனியைப் பொருத்தவரையில், தேசியவாதிகளால் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதும், சில நேரங்களில் அவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவந்துள்ளது.

அதேபோல் வலது சாரியினரை தொடர்ந்து எதிர்த்து வந்த SPD கட்சியினரான Focke-ம், தேசியவாதிகளால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தார்.

அகதிகளுக்கு நீண்டகாலமாக உதவி வந்த Focke-ன் காரில் ஸ்வஸ்திகா அடையாளங்களை வரைவது, துண்டுக் காகிதங்களில் உன்னைக் கொளுத்தி விடுவோம் என மிரட்டல் விடுப்பது என தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவர். இது வேதனையளிக்கும் ஒரு முடிவுதான், ஆனால், நான் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளேன் என்கிறார் Focke.

ஃபெடரல் அதிகாரிகள் இந்த மிரட்டல் காகிதங்கள் மற்றும் ஸ்வஸ்திகா தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பும் Focke, தன்னைப் போலவே பல அரசியல்வாதிகள் ராஜினாமா செய்துள்ளதாகவும், பயத்தால் அதை வெளிப்படையாக சொல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்