ஒரு சிறு ஆணியுடன் பிடிபட்ட நபர்... அவர் ஏற்படுத்திய இழப்பு 930,000 யூரோக்கள்: அவர் செய்த குற்றம்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஒரு சிறு ஆணியுடன் பிடிபட்ட ஒருவரால் 930,000 யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பவேரியாவில், 2018ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையில் பல கார்கள் ஆணியால் கீறப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

சுமார் 642 கார்கள் வரை சேதப்படுத்தப்பட்டதால், 930,000 யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டது.

யார் இதைச் செய்வது என்று கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறிவந்தனர். கடைசியில், ’paint scraper’ என்ற பெயரில் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், யாரோ தனது வீட்டுக்கு வெளியே காரை கீறும் சத்தம் கேட்ட ஒரு நபர் பொலிசாரை அழைக்க, விரைந்து வந்த பொலிசார் சம்பவ இடத்தில் ஆணியுடன் நின்ற ஒருவரைக் கைது செய்தனர்.

உண்மையில், அந்த நபர் 1,700 வாகனங்கள் வரை சேதப்படுத்தி, 2.3 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்படுத்தியிருக்கலாம் என்று பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஆனால், அதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் இல்லாததால், நீதிமன்றம் அந்த புகாரை தள்ளுபடி செய்துவிட்டது.

தற்போது, 642 கார்கள் சேதப்படுத்தப்பட்டதற்கான குற்றச்சாட்டை மட்டும் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்