பெர்லினில் அதிக வாடகையால் தவிக்கும் 340,000 குடும்பங்கள்: அரசு அதிரடி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லினில் சுமார் 340,000 குடும்பங்கள் அதிக வாடகையால் தவிப்பதையடுத்து அவர்களுக்கு உதவ அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு பெர்லின் மாகாண அரசு சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை ஒப்புக்கொண்டது. அதன்படி, ராக்கெட் வேகத்தில் ஏறும் வீட்டு வாடகைகளை கட்டுப்படுத்த அரசு தலையிடும்.

அதன்படி, சுமார் 1.5 மில்லியன் வீடுகளின் வாடகைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஃப்ரீஸ் செய்யப்படும்.

அதாவது வீட்டு உரிமையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வாடகையை அதிகரிக்கக்கூடாது.

அத்துடன், சதுர மீற்றர் ஒன்றிற்கு 9.80 யூரோக்களுக்கு அதிகமாக வாடகை வாங்கக்கூடாது.

மேலும், முன்பு வாடகைக்கு இருந்தவர்களிடம் என்ன வாடகை வசூலிக்கப்பட்டதோ, அதைவிட அதிக வாடகை புதிதாக வருபவர்களிடம் வசூலிக்கக்கூடாது.

வாடகைக்கு வருபவர்களும் அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமாக வாடகை வசூலிப்பது தெரியவந்தால், அதைக் குறைக்கக்கோரி விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆன பின்னர்தான் வாடகை குறைப்பதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கிடையில், பண வீக்கத்தைக் கணக்கிட்டு நில, வீட்டு உரிமையாளர்கள் 2022இலிருந்து ஆண்டொன்றிற்கு 1.3 சதவிகிதம் வரை வாடகையை உயர்த்திக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்