அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்..! ஈராக்கிடம் பணிந்தது ஜேர்மனி... முக்கிய அறிவிப்பு வெளியானது

Report Print Basu in ஜேர்மனி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரிக்கும் நிலையில், ஈராக்கில் உள்ள படைகளை திரும்பப் பெறுவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதை அடுத்து, வாஷிங்டனுக்கும் தெஹரானுக்கும் இடையிலான நெருக்கடி கடுமையாக அதிகரித்துள்ளது.

ஈராக்கின் ஸ்திரத்தன்மையும் ஒற்றுமையும் சமீபத்திய பதற்றங்களுக்கு இரையாகிவிடக் கூடாது என்பதே எங்களின் தலையாய விருப்பம்.

எங்களின் முக்கிய முன்னுரிமை எங்கள் வீரர்களின் பாதுகாப்பாக உள்ளது. ஈராக்கில் சுமார் 120 ஜேர்மனிய வீரர்கள் உள்ளனர்.

ஈராக்கில் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ள ஜேர்மனி வீரர்கள் தற்போது அண்டை நாடான ஜோர்டான் மற்றும் குவைத்துக்கு செல்வார்கள் என என்று ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாக்தாத்தில் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து வெளிநாட்டு படைகளையும் வெளியேற்ற ஈராக் நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஈராக் பாராளுமன்றத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து, எதிர்கால உறவுகளை எவ்வாறு வடிவமைக்க விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்துவதற்காக ஈராக் அரசாங்கத்துடன் உடனடியாக பேசுவோம் என்று மாஸ் கூறினார்.

மேலும், ஈராக் விரும்பினால் மற்றும் சூழ்நிலைகள் அனுமதித்தால் ஜேர்மனி தொடர்ந்து தனது ஆதரவை வழங்க தயாராக உள்ளது என்று ஹெய்கோ மாஸ் உறுதிப்படுத்தினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்