ஜேர்மனில் கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்ற நபரை சுட்டுக்கொன்ற பொலிஸார்

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனில் ரோந்து அதிகாரிகளை கத்தியால் தாக்க முயன்ற நபரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கெல்சென்கிர்ச்சென் நகரில் ரோந்து அதிகாரிகளை கத்தியால் தாக்க முயன்ற ஒரு துருக்கிய நாட்டவரை ஜெர்மன் பொலிஸார் கொன்றதாக கூறப்படுகிறது. சந்தேக நபர் வன்முறைக் குற்றங்கள் குறித்து தீவிரமான பதிவு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 19:40 மணிக்கு நிகழ்ந்ததாக, கெல்சென்கிர்ச்சென் பொலிஸின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2 அதிகாரிகள் தங்கள் பணியை தொடங்கத் தயாராகி, ரோந்து காரின் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் பொலிஸ் வாகனத்தை நோக்கி ஏதோ ஒரு பொருளை எறிந்துள்ளார்.

அதிகாரிகள் அந்த நபரை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு கத்தியை வெளியே எடுத்து அதிகாரிகளை தாக்க முயன்றார். இறுதியில், "அல்லாஹு அக்பர்" என்று கத்துவதற்கு முன்னர் சந்தேக நபர் கொல்லப்பட்டார் என தெரியவந்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொல்லப்பட்ட சந்தேக நபரின் அடையாளம் தெரியவில்லை. கில்சென்கிர்ச் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர், தாக்குதல் நடத்தியவர் 37 வயதான பைத்தியம் மற்றும் துருக்கிய குடியுரிமை பெற்றவர் என்று மட்டுமே கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்