ஜேர்மன் உயிரியல் பூங்கா தீ விபத்துக்கான காரணம் தெரியவந்தது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் உயிரியல் பூங்கா தீ விபத்துக்கான காரணம் பட்டாசுகளாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில் தற்போது அதிகாரிகள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஜேர்மனியின் Krefeld நகரிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்று தீப்பற்றி எரிந்ததில், கொரில்லாக்கள், உராங் உட்டான்கள், சிம்பன்சிக்கள் மற்றும் marmosets வகை குரங்குகள் என சுமார் 30 விலங்குகள் பரிதாபமாக சாம்பலாகின.

இந்த தீ விபத்தில், இரண்டு சிம்பன்சிக்கள் மற்றும் பக்கத்து கட்டிடத்தில் இருந்த ஒரு கொரில்லா குடும்பம் ஆகியவை மட்டும் தப்பின.

இந்நிலையில், lanterns எனப்படும் பறக்கவிடப்படும் காகித விளக்குகள் இந்த தீ விபத்துக்குக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி சந்தேகம் ஏற்படுவதற்கு காரணம், உயிரியல் பூங்காவில், சம்பவ இடத்தில், கையால் புத்தாண்டு வாழ்த்து எழுதப்பட்ட மூன்று காகித விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான்.

இவ்வகை விளக்குகளுக்கு அப்பகுதியில் 2009ஆம் ஆண்டு முதலே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொலிசார் கவனக்குறைவு காரணமாக தீ விபத்துக்கு காரணமாக இருந்ததாக கூறி விசாரணை ஒன்றை துவக்கிய நிலையில், ஏராளமானோர் பொலிசாரிடம் தாங்களாகவே சென்று தாங்கள் அந்த விளக்குகளை பயன்படுத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Krefeld பொலிசார் அவர்களது வாக்குமூலங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், ஜேர்மன் விலங்குகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, உயிரியல் பூங்காக்கள், பண்ணைகள் மற்றும் விலங்குகள் காப்பகங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதற்கு உடனடி தடை விதித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்