ஜேர்மனியில் பிரபல சுற்றுலாத்தலத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: பொலிசார் குவிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றின் அருகில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜேர்மனியில் Checkpoint Charlie என்றொரு இடம் உள்ளது. முன்பு கிழக்கு மற்றும் ஜேர்மனி சந்திக்கும் இடத்தில் சோதனைச்சாவடியாக செயல்பட்ட இந்த இடம், ஜேர்மனி இணைந்த பிறகு, தற்போது பிரபல சுற்றுலாத்தலமாக உள்ளது.

நேற்று முன்தினம் அப்பகுதியில் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றார்.

மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க, சாலையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

முதலில் கடை ஒன்றில் கொள்ளை ஒன்று நடந்ததாகவும், அதனால் ஏற்பட்ட துப்பாக்கி சுடும் சத்தம்தான் இது என்றும் கூறப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

அந்த இடத்தில் தற்போது ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டவரை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவர் யார், எதற்காக சுட்டார் என எந்த விடயமும் தெரியாத நிலையில், பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்