ஜேர்மனியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இந்திய தம்பதி: வெளியான சம்பவம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் தம்பதி ஒன்று இந்தியாவின் புலனாய்வு அமைப்புக்காக காஷ்மீர் மற்றும் சீக்கியர்கள் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினருக்கு சிறைத்தண்டனையில் இருந்து விலக்கு அளித்துள்ளதுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களான 50 வயது மன்மோகன் எஸ் மற்றும் அவரது மனைவி கன்வால் ஜித் கே(51) ஆகியோரே Frankfurt நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள்.

இந்திய புலனாய்வு அமைப்புக்காக உளவு பார்த்த இவர்கள் இருவருக்கும் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், குறித்த செயலில் ஈடுபடுவதற்காக அவர்கள் இருவரும் பெற்றுக்கொண்ட வருவாயில் 180 நாட்களுக்கான கட்டணத்தை அபராதமாக செலுத்தவும் தீர்ப்பாகியுள்ளது.

50 வயதான மன்மோகன் கடந்த 2015 ஜனவரி முதலே உளவு பார்ப்பதில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து தகவல்களை பெற்று உரிய நபர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை 2017 ஜூலை முதல் அவரது மனைவி மேற்கொண்டுள்ளார்.

இதற்கான ஊதியமாக சுமார் 7,200 யூரோ தொகையை இருவரும் இந்திய புலனாய்வு அமைப்பிடம் இருந்து பெற்றுள்ளனர்.

மட்டுமின்றி இருவரும் ஜேர்மனியில் உள்ள இந்திய உளவு அதிகாரிகலுடன் அடிக்கடி சந்தித்து பேசியும் உள்ளனர்.

பிரித்தானியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு பின்னர் ஐரோப்பா நாடுகளில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று ஜேர்மனி.

இங்கு 10,000 முதல் 20,000 சீக்கியர்கள் குடியிருந்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்